மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற பெற்றோர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மகளை, பெற்றோர் அழைத்துச் சென்றது குறித்து...

Bigg Boss

நேஹா, நேஹாவின் பெற்றோர் - எக்ஸ்

Published On :1 நவம்பர் 2026, 3:48 pm IST

திறமைகளைக் காட்டி மக்கள் மனங்களைக் கவரவும், திரைத்துறையில் வாய்ப்புகளைப் பெறவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் பங்கேற்பது வழக்கம்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது மகளை பெற்றோர்கள் பிக் பாஸ் அரங்குக்கே வந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதன் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டிகள் வடிவமைக்கப்படும். அதில், நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களே எதிர்பாராத விதமாக பல திருப்பங்களும் உருவாகும்.

பிக் பாஸ் சீசன் 8 மலையாளத்தில் அத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினரை சந்திக்கும் டாஸ்க் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்ப உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். போட்டியாளர்கள் இத்தனை மாதங்களாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து உள்ள நிலையில், ஆட்டத்தின் மூலம் தங்கள் உண்மையான முகம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கும்.

இது நேர்மறையாகவும் இருக்கும் சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும் போட்டியாளர்களுக்கு ஏற்படுத்தும். அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 8 மலையாளம் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நேஹாவின் பெற்றோர், வார இறுதி நிகழ்ச்சியில் பிக் பாஸ் மேடைக்கு வந்து, தங்கள் மகளை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர்.

நடிகர் மோகன் லால் மலையாள பிக் பாஸை தொகுத்து வழங்கி வருகிறார். நேஹாவின் பெற்றோரை மேடைக்கு அழைத்த அவர், நேஹாவுடன் பெற்றோரை பேசுமாறு கூறினார்.

பெற்றோரை மேடையில் கண்ட நேஹா, இன்ப அதிர்ச்சியில் இருந்தபோது, நேஹாவின் பெற்றோர் ''எங்களை உனக்கு நினைவிருக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

'' ஏன் அப்பா, உங்களை எப்படி மறப்பேன் என நேஹா கூறினார். ஆனால், பார்ப்பதற்கு அவ்வாறு தெரியவில்லை என அவரின் தந்தை பதில் அளிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நேஹாவின் பெற்றோர், மற்ற போட்டியாளர்கள் தங்கள் கேமை விளையாடுகின்றனர். ஆனால், நீ உணர்வுப்பூர்வமாக சிக்கிக்கொள்கிறாய். அதுதான் மற்ற போட்டியாளருடன் திருமணம் வரைக்கும் உன்னை பேச வைத்துள்ளது. இது உனக்கு நல்லதல்ல. நீ எங்களுடன் வந்துவிடு எனக் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹா, மனமுடைந்து அழுகிறார்.

இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது. பெற்றோரே நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்து தனது மகளை அனுப்புமாறு கேட்பது பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss Malayalam Season 8 Neha's parents enter the show to take her back home

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.