மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீனில் நடிக்கும் போது பயமாகத்தான் இருந்தது: நஸ்லன்

சீன் திரைப்படம் குறித்து நஸ்லன்...

நடிகர் நஸ்லன்

Published On :1 நவம்பர் 2026, 1:46 pm IST

நடிகர் நஸ்லன் சீன் திரைப்பட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் நஸ்லன், “நான் இதுவரை எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் நடித்ததில்லை. சீன் என் முதல் தமிழ்ப்படம். வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மிகுந்த அன்பைத் தருகிறார்கள். இது வெளியீட்டுக்குப் பின்பும் நீடிக்க வேண்டும். சீன் திரைப்படத்தில் என் கதாபாத்திரம் மோசமான வில்லனெல்லாம் கிடையாது.

சூர்யா சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும்போது பயமாகவும் இருந்தது. தினமும் படப்பிடிப்பில் மதியம் மற்றும் இரவு உணவின் போது சூர்யா சாரிடமிருந்து ஒரு டிப்பன் பாக்ஸ் வந்துவிடும். அந்த அளவிற்கு அன்பைக் கொடுத்தார். இதனால், படப்பிடிப்பில் நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். ழகரம் நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்களில் அவரை விட வயதில் மிக இளையவரான ஒருவர் முதல்முறை வில்லனாக நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor Naslen has shared his experience of working on the film scene

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.