டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

என் பொண்டாட்டி இல்லையென்றால்... உருக்கமாகப் பேசிய சூர்யா!

ஜோதிகா குறித்து சூர்யா பேசியது வைரல்....

நடிகர்கள் சூர்யா, ஜோதிகா

Published On :1 நவம்பர் 2026, 12:32 pm IST

நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகா குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் சீன் நன்றாக இருந்தால் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, "அப்பா, அம்மா, தம்பி, தங்கை அமைந்ததை என்னால் முடிவு செய்ய முடியாது. அந்த வீட்டில் பிறந்தேன்; அவர்களுடன் இருந்தேன். ஆனால், மனைவி அமைவதெல்லாம் எனச் சொல்வார்களே... என்னை வழிநடத்துவது என் பொண்டாட்டிதான். நிறைய தவறுகளைச் செய்து கீழே விழுந்திருக்கிறேன். அதனைச் சுட்டிக்காட்டி என்னை சரி செய்ததாக இருகட்டும்; நான் சரியாக இருப்பதாக நடப்பதாகட்டும் எல்லா நேரமும் என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது என் ஜோதான். மிகச்சிறந்த மனைவி, அருமையான தாய், நல்ல தோழி என நான் இப்படியான ஒரு ஆளாக இருப்பதற்கான எல்லா விஷயங்களும் என் மனைவியால்தான் நடந்தது” எனத் தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி பேசியபோது, “அண்ணனுக்கும் அண்ணிக்கும் மீண்டும் திருமண நிகழ்வு நடைபெற்ற போது எனக்கும் மனைவிக்கும் சண்டையே வந்துவிட்டது. அங்கு வந்திருந்த பலருக்கும் இதான் நிலைமை. இவர்கள் இருவரும் (சூர்யா, ஜோதிகா) ஓவராக காதலிக்கிறார்கள். இவர்கள் எப்படி காதலிக்கிறார்கள் பார் என பல குடும்பங்களில் சரியாக உணவுகூட கிடைப்பது இல்லையாம்” என நகைச்சுவையாகக் கூறியதும் வைரலாகி வருகிறது.

Actor Suriya has spoken movingly about his wife, Jyothika.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.