கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிரித்து, சிரித்து சீன் கதையைக் கேட்டேன்: சூர்யா

சீன் திரைப்படம் குறித்து சூர்யா பேச்சு...

நடிகர் சூர்யா

Published On :26 அக்டோபர் 2026, 1:34 pm IST

நடிகர் சூர்யா சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று (அக். 25) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, ”ஜித்து மாதவனுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை எழுந்தபோது சரியாக அதற்கான வாய்ப்புகளும் இணைந்தன. கதை கேட்கும்போது நான் அமைதியாகவே கேட்பேன். ஆனால், ஜித்து சீன் கதையைச் சொல்ல, சொல்லவே சிரித்துக்கொண்டுதான் கேட்டேன். ரோமஞ்சம், ஆவேஷம் திரைப்படங்களைப் போல் இதிலும் ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் உங்களுக்குப் பிடித்தது போல் இப்படமும் பிடிக்கும். ழகரம் நிறுவனத்தின் முதல் திரைப்படம் இது. உங்களின் ஆசிர்வாதமும் அன்பும் வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Suriya spoke about the film 'Seen' at its music launch event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.