விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் நடிகை சுஜிதா இணைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் சின்ன மருமகள்.
மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
டிஆர்பியிலும் முன்னணியில் உள்ள சின்ன மருமகள் தொடர், ஸ்வாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், சின்ன மருமகள் தொடரில் நடிகை சுஜிதா இணைந்துள்ளார். இவர் இந்தத் தொடரில் வழக்குரைஞர் பாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை சுஜிதா, சின்ன மருமகள் தொடரில் நடிக்கவுள்ளது, கதையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் வருகை தொடருக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சுஜிதா, கெளரி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடித்து வருகிறார். மேலும், சமையல் எக்ஸ்பரஸ் என்ற சமையல் நிகழ்ச்சியிலும் நடிகை சுஜிதா பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Actress Sujitha, a popular figure from Pandian Stores, has joined the cast of the series Chinna Marumagal, currently airing on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


