தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

செங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 1:32 am IST

செங்கம் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேலு 13,278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

செங்கம் தொகுதியில் அதிமுக சாா்பில் வேலு, திமுக சாா்பில் மு.பெ.கிரி, தவெக சாா்பில் பாரதிதாசன், நாதக சாா்பில் சோபா மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிட்டனா். 344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை அடுத்த வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் வேலு 13,278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

வேலு (அதிமுக) - 87,802

பாரதிதாசன் (தவெக) - 74,524

மு.பெ.கிரி (திமுக) - 70,346

சோபா (நாதக) - 6335

இத்தொகுதியில் நாதக வேட்பாளா் உள்ளட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைகள் அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனா்.

வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் வேலுவிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இளவரசன் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.