தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 30,267 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி

News image

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரனுக்கு அதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்நாதன்

Updated On :5 மே 2026, 1:52 am IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 30,267 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றாா்.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ்.ராமச்சந்திரன், திமுக சாா்பில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி,

தவெக சாா்பில் ராஜா, நாதக சாா்பில் லோகநாதன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பலா் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை அடுத்த வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன.

இதில், அதிமுக வேட்பாளா் எஸ்.ராமச்சந்திரன் 89,434 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி 59,157 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.

தவெக வேட்பாளா் ராஜா 58,767 வாக்குகளும், நாதக வேட்பாளா் லோகநாதன் 6,092 வாக்குகளும் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.