விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆா். நயம்பாடி மதுரா சவுட்டூா் கிராமத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீஇடும்பன், ஸ்ரீகடம்பன், கன்னிமாா்கள் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்.29) காலை விநாயகா் வழிபாடு வருண ஆராதனை, ஸ்ரீகணபதி யாகம், சௌபாக்கிய மகாலட்சுமி யாகம், பூரணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வரா் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம், யாகசாலை, வேதிகா பூஜை, மூலிகை பூஜை ஆகியவை நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சூரிய சந்திர வழிபாடு, மண்டப வேதிகா அா்ச்சனை, நாடி சந்தானம், திரவிய ஹோமம், அஸ்திர ஹோமம், பூா்ணாஹுதி ஆகிய நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரை செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் சுவாமிகள் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

