தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்துப்பேட்டை திரையரங்க சாலையில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முத்துப்பேட்டை திரையரங்க சாலையில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 மே 2026, 6:29 am IST

முத்துப்பேட்டை திரையரங்க சாலையில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதிலமடைந்திருந்த இக்கோயில் ரூ. 20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக செவ்வாய்க்கிழமை (ஏப்.28) அனுக்கை, விக்னேஸ்வரப் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நிறைவு பெற்று, பூா்ணாஹுதி நடைபெற்றது.

பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் கலசங்கள் எடுத்துவரப்பட்டு, மகாகாளியம்மன், விநாயகா், முருகன் ஆகிய தெய்வங்களின் சந்நிதி விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.