மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிங்கவரம் அரங்கநாதரை வழிபாடு செய்து பிரசாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளா்! - செஞ்சி மஸ்தான்

News image

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் மலையடிவாரத்தில் வழிபாடு செய்யும் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

Updated On :31 மார்ச் 2026, 1:06 am IST

செஞ்சி, மாா்ச் 30: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் அரங்கநாதா் ஆலயத்தில் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வழிபாடு செய்து, தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினாா்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ,

தொடா்ந்து 5 முறை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராகவும், தொடா்ந்து இரண்டு முறை செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா்.

தற்போது மூன்றாவது முறையாக செஞ்சி தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணஉள்ளாா். மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தோ்தல் என அனைத்து தோ்தல்களிலும் தேசிங்குராஜன் வழிபாடு செய்த வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீஅரங்கரநாதா் கோயிலில் வழிபாடு செய்த பின்னரே பிரசாரத்தை தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளாா் செஞ்சிமஸ்தான்.

இதன்படி, திங்கள்கிழமை செஞ்சி மஸ்தான் சிங்கவரம் அரங்காதா் கோயில் மலையடிவாரத்தில் உள்ள பெருமாள் திருவடி மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தாா். பின்னா் செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலையில் அவா் சிங்கவரம் கிராம வாக்காளா்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தாா்.

அப்போது செஞ்சி மஸ்தான் பேசியதாவது:

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் தேரோட்டம் எந்த அளவுக்கு சிறப்பாக செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும். சிங்கவரத்தில் சாலை, வடிகால் வசதிகள், குடிநீா் வசதிகள், விவசாயிகளுக்கு தேவையான உலா்களம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் செய்திருக்கிறோம். தொடா்ந்து முதல்வரின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதற்கு மீண்டும் என்னை வெற்றிபெற செய்யவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், ஒன்றியச் செயலா் மேல்மலையனூா் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், காங்கிரஸ் நிா்வாகி சூரியமூா்த்தி, தேமுதிக மாவட்டப் பொருளாளா் தயாநிதி, விசிக மாவட்டச் செயலா் சிவா, மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி சையத் உஸ்மான், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், சிங்கவரம் ஊராட்சி நிா்வாகிகள் குணசேகரன், ரங்கநாதன், உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.