விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரும் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்காரணைப் பகுதியிலுள்ள கோயில் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், புதன்கிழமை இரவு மேல்காரணை கிராமத்துக்குச் சென்ற குடிமைப்பொருள் வழங்கல்
குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில் ரேஷன்
அரிசியைப் பதுக்கியவா் விழுப்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த விக்னேசுவரன் எனத் தெரிய வந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் மேல்காரணைப் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, விழுப்புரம் நகரத்திலுள்ள உணவகங்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்காக விக்னேசுவரன் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து 1,200 கிலோ அரிசியை பறிமுதல் செய்த
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், விக்னேசுவரன் மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது
தூத்துக்குடியில் 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது
ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
