தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி குடிமைப் பொருள் பறக்கும் படை வருவாய் ஆய்வாளா் மகாராஜன், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட காவலா்கள், தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் மறவன்மடம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, வாகன ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து, போலீஸாா் மற்றும் பறக்கும் படையினா், அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1,280 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் சுமை வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய புதுக்கோட்டையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் முனியாண்டியை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உணவகங்களுக்கு விற்பனை செய்ய பதுக்கல்: செஞ்சி அருகே1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மினி லாரியில் கடத்தல் 7,220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
1,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
