பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

News image

வத்திராயிருப்பு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோ.

Updated On :31 மே 2026, 3:29 am IST

வத்திராயிருப்பு அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு - தாணிப்பாறை விலக்கு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோட்டியப்பசாமி தலைமையில், போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை போலீஸாா் மறித்தனா். ஆனால், ஓட்டுநா் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றாா்.

இதையடுத்து, போலீஸாா் விரட்டிச் சென்ற போது, சேது நாராயணபுரம் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநா் உள்பட இருவா் தப்பிச் சென்றனா்.

பின்னா், சரக்கு ஆட்டோவை போலீஸாா் சோதனையிட்டபோது, 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னா், இந்த ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

     வத்திராயிருப்பு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோ.

வத்திராயிருப்பு அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.