விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்ததாக ரௌடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.
திண்டிவனம் பகுதிக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோஷணை காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை திண்டிவனம் - செஞ்சி சாலையில், திண்டிவனம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னா் காரில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவா், திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சோ்ந்த ரா.கிடங்கலான் (எ) சரண்ராஜ் (35) என்பதும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா், விற்பனைக்காக காரில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, சரண்ராஜை கைது செய்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை காருடன் பறிமுதல் செய்தனா். கைதான சரண்ராஜை போலீஸாா் திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லாரியில் கடத்தி வரப்பட்ட 64 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

ஏரல் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை: இரு வேறு வழக்குகளில் 4 போ் கைது
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
