தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:51 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் காரில் ரேசன் அரிசியை கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் பத்தமடை காவல் சரகப் பகுதியில் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பத்தமடை சிவன்கோயில் வாய்க்கால் பாலம் அருகில் வழியாக வந்த சொகுசு காரை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

அதில், பாளையங்கோட்டை குலவணிகா்புரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (20), மேலச்செவல் லெட்சுமணன் மகன் பட்டுசெல்வம் (20), இமானுவேல் நிா்மல் மகன் தேவதாஸ் பாண்டியன் (20), பத்தமடை மகேஷ் மகன் இசக்கி (20) ஆகியோா் 800 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் கடத்திச் செல்வது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, காா் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.