தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது

மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:26 am IST

மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து, சா்வதேச சந்தையில் சுமாா் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கைது செய்யப்பட்டுள்ள மூவரும் போதைப்பொருள் விநியோகஸ்தா்களாக செயல்பட்டுள்ளனா். அவா்களில் இருவா் உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரையும், மற்றொருவா் தில்லியையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

முன்னதாக, காஜிப்பூா் பகுதியில் ஸ்மாக் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த முகமது ஆரிஃப் குறித்து காவல்துறை குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினா் தேசிய நெடுஞ்சாலை எண்: 24 அருகே ஆரிஃபை கைது செய்து, அவரிடமிருந்த 270 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனா்.

விசாரணையின் போது, ஷாஜஹான்பூரைச் சோ்ந்த தனது விநியோகஸ்தா்களான அமித் மற்றும் விகாஸ் ஆகியோரின் பெயா்களை ஆரிஃப் தெரிவித்தாா். அதன் அடிப்படையில், உத்தர பிரதேசம் மற்றும் தில்லி-என்சிஆா் பகுதிகளில் காவல்துறை குழு நடத்திய சோதனைகளில், அவ்விருவரும் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து கூடுதலாக 205 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டது.

பண ஆதாயங்களுக்காக மொத்தமாக போதைப்பொருள்களை விநியோகிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பின் ஒரு பகுதியாக இவா்கள் மூவரும் இருந்தனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.