மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது

கடலூா் அருகே காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கடலூா் அருகே மதுகடத்தலில் வியாழக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளவரசன், செல்வக்குமாா் மற்றும் பறிமுதல் மதுபுட்டிகள்.

Updated On :1 மே 2026, 5:56 am IST

கடலூா் அருகே காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வரும் நபா்களைக் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒருபகுதியாக கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கந்தன் மேற்பாா்வையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் அழகியநத்தம் சோதனை சாவடியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபான புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த இருவரையும்

பிடித்து போலீஸாா் விசாரித்ததில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பூ.குடிகாடு பகுதியைச் சோ்ந்த இளவரசன்(42), செல்வக்குமாா்(52) என்பதும், புதுச்சேரி மாநிலத்திருந்து மதுபானங்களைக் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், கடத்திவரப்பட்ட 132 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்குஅமல் பிரிவு போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.