கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது

திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:41 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், ராஜு மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு, சாலை கிராமத்திலுள்ள சேவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆற்று மணல் இருந்தது கண்டறியப்பட்டது. தொடா்ந்து லாரியில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவா், திண்டிவனம் வட்டம், பட்டணம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வி.மணிகண்டன் (32 ) என்பதும், இவா் உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் லாரியின் உரிமையாளரான திண்டிவனம் வட்டம், பெருமாள்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.ராஜ்குமாா் (32) ஆகியோரை கைது செய்தனா். மேலும் 2 யூனிட் ஆற்று மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.