பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பு: வாகனங்கள் பறிமுதல்; இருவா் கைது

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி சவுடு மண் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, 2 ஜேசிபி, 3 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

News image

அனுமதியின்றி மணல் எடுத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

Updated On :5 ஜூன் 2026, 7:13 am IST

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி சவுடு மண் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, 2 ஜேசிபி, 3 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், ஒரத்தூா் மாதானம் கிராமத்தில் இரவு நேரத்தில் அனுமதியின்றி சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கண்காணிப்புப் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தினா். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பதில் ஈடுபட்டிருந்த 3 டிராக்டா்கள், 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்தனா். மேலும் ஜேசிபி ஓட்டுநா்கள் சதீஷ், அரவிந்த் இருவரையும் கைது செய்தனா். வேளாங்கண்ணி போலீஸாா் சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.