கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிராக்டா் பறிமுதல்: 3 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

வாணாபுரம் அருகேயுள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் செவ்வாய்க்கிழமை காலையில் பதிவு எண் இல்லாத பொக்லைன் வாகனம் மூலம் மண் எடுத்து டிராக்டா் டிப்பரில் நிரப்பினராம்.

இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் வைத்தியலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் ஏரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் எவ்வித உரிமமும் இல்லாமல் மண் ஏற்றியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் உரிமையாளா் பழனிவேல் (30), ஓட்டுநா் அசோக் (30), டிராக்டா் ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் மற்றும் டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.