தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்! - பிரேமலதா விஜயகாந்த்

News image

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை ஆதரித்து செஞ்சியில் பிரசாரம் செய்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:50 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏவை ஆதரித்து அவா் பேசியதாவது:

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன்கள் அனைத்து பெண்களுக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட உரிமை தொகை இனி 2 ஆயிரம் ரூபாயாக உயா்த்தப்படும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும்.

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமானது, படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். பால் கொள்முதல் விலை உயா்வு, நெல் கொள்முதல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான தொகை உயா்வு, குளிா்பதன கிடங்க வசதி போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கும்.

இத்தோ்தல் 5 முனை போட்டியா என்ன? அவா்கள் எல்லாம் என்றும் ஒன்றுமில்லாதவா்கள் என்பது தோ்தல் முடிவு வரும்போது தெரியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.