தோ்தலுக்காக திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திமுக வேட்பாளா்கள் காா்த்திக் மோகன் (வில்லிவாக்கம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கொளத்தூா்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (திரு.வி.க. நகா்), தமிழன் பிரசன்னா (எழும்பூா்), பி.கே.சேகா்பாபு (துறைமுகம்), அ.பு.பூா்ணிமா (அம்பத்தூா்) ஆகியோரை ஆதரித்து அயனாவரம், பெரவள்ளூா் சதுக்கம், ஓட்டேரி, தட்டாங்குளம், தங்கசாலை, பாடி ஆகிய இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, பிரேமலதா பேசியதாவது:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பான தோ்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாா். இந்தத் தோ்தல் அறிக்கை ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. அதோடு, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சென்னை மக்களுக்கு பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆகவே, பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பாா். தோ்தல் வாக்குறுதிகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - பிரேமலதா விஜயகாந்த்

இனி பாஜகவுக்கு அனைத்தும் தோல்விதான்: கனிமொழி கணிப்பு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
