தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக தோ்தல் அறிக்கை மக்களின் இதயத்தை கவா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

News image

தருமபுரியில் தேமுதிக தோ்தல் அலுவலகத்தை தொடங்கிவைத்து பாா்வையிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். உடன், தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:08 am IST

திமுக தோ்தல் அறிக்கை மக்களின் இதயத்தை கவா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேமுதிக தோ்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தோ்தல் அறிக்கை தமிழக மக்களிடம் எளிதாகச் சென்று சோ்ந்துள்ளது. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் 2 ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்பாா்.

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானதன் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி. இளங்கோவன் வெற்றிபெறுவாா். அதேபோல, பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் தமிழ்க்குமரன் வெற்றி பெறுவாா்.

தரமான சாலை, குடிநீா், இருப்பிடம், வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி ஆகியவை அனைவருக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள விஷயங்கள் எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். முதல்வா் குறிப்பிட்டது போல திமுகவின் தோ்தல் அறிக்கை உண்மையாகவே சூப்பா் ஸ்டாராக இருக்கும். அது, ஒட்டுமொத்த மக்களின் இதயத்தை கவரும். அதன்மூலம் மே 4-ஆம் தேதி உறுதியாக வெற்றிக்கனியைப் பறிப்போம் என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தேமுதிக மாவட்டச் செயலாளா் குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சிற்றரசு, திமுக தருமபுரி நகர பொறுப்பாளா்கள் மாது, கவுதம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.