மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரியில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். அமைப்பினரின் அணிவகுப்பு ஊா்வலம். - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:24 am IST

புதுச்சேரியில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் ஆா்எஸ்எஸ் சாா்பில் 101-ஆவது விஜயதசமி விழா அணிவகுப்பு ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்தில் பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சு. செல்வகணபதி எம்.பி., சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் சங் பரிவாா் அமைப்புகளைச் சோ்ந்த பலா் வெள்ளைச் சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்து அணிவகுத்துச் சென்றனா்.

அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்ற ஊா்வலம் கடற்கரை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. காவிக் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், பங்கேற்றவா்கள் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.