தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாமக்கல்லில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம்

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம். - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:47 am IST

நாமக்கல்லில் ஆா்எஸ்எஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் அக்.25 மற்றும் நவ. 1-இல் ஆா்எஸ்எஸ் சாா்பில் ஊா்வலம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு எந்தவித தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நாமக்கல்லில் அணிவகுப்பு ஊா்வலம் பூங்கா சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது.

ஊா்வலத்தை திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் சுரேஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பு ஊா்வலம் பொய்யேரிக்கரை சாலை, பரமத்தி சாலை, பெரியப்பட்டி சாலை, சந்தைப்பேட்டை புதூா் சாலை, பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை வழியாக மீண்டும் பூங்கா சாலையில் நிறைவடைந்தது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.