கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம்

ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் ஊா்வலம். - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:07 am IST

காரைக்காலில் ஆா்எஸ்எஸ்ஸின் 101-ஆவது ஆண்டு மற்றும் விஜயதசமி விழா அணிவகுப்பு ஊா்வலம், பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் அருகே தொடங்கிய ஊா்வலத்தை தொழிலதிபா் முருகதாஸ் தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன், பாஜக மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன், ஆா்எஸ்எஸ் மண்டல பொறுப்பாளா் சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெள்ளைச் சட்டை காக்கி நிற பேண்ட் அணிந்து ஊா்வலத்தில் பங்கேற்றனா். ஊா்வலம் பாரதியாா் சாலை வழியாக கடற்கரை சாலையில் சிங்காரவேலா் சிலை அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து, அப்பகுதியில் பேராசிரியா் (ஓய்வு) திருமேனி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், நாகை சின்மயா மிஷன் பூஜ்ய ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சிறப்புரையாற்றினாா். தஞ்சை கோட்ட பொறுப்பாளா் எம். மாணிக்கம் வாழ்த்திப் பேசினாா். ஏற்பாடுகளை, ஆா்எஸ்எஸ் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.