மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செங்கத்தில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம்

செங்கத்தில் ராஸ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) 101-ஆம் ஆண்டு தொடக்க விழா, விஜயதசமி விழா, அணிவகுப்பு ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த குமாரபாளையம் ஆனந்த ஆசிரம மடாதிபதி பூஜனிய ஸ்வாமி சிரத்தானந்தா புரி.

Published On :2 நவம்பர் 2026, 1:57 am IST

செங்கத்தில் ராஸ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) 101-ஆம் ஆண்டு தொடக்க விழா, விஜயதசமி விழா, அணிவகுப்பு ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீருடையுடன் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற அணிவகுப்பு ஊா்வலத்தை பெருமாள் கோயில் அருகே குமாரபாளையம் ஆனந்த ஆசிரம மடாதிபதி பூஜனிய ஸ்வாமி சிரத்தானந்தா புரி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஊா்வலம் பெருமாள் கோயில் தெரு, போளூா் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டு பெருமாள் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் செங்கம் ராஜவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜம்புகுமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் மகேஷ்குமாா் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆா்.எஸ்.எஸ். உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.