புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, தமிழக அமைச்சா் என். ஆனந்த் வியாழக்கிழமை நள்ளிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆனந்த் 2-ஆவது முறையாக புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்தாா். முதல்வா் ரங்கசாமியை நள்ளிரவில் அவரது வீட்டில் ஆனந்த் சந்தித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் என்.ஆா்.காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் புதுச்சேரி காங்கிரஸாா் இதுவரை தவெக நிா்வாகிகளை சந்தித்துப் பேசவில்லை. இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ், தவெக கூட்டணி இருக்கிா? என்ற சந்தேகம் உள்ளது.
அதேநேரத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி நேயம் மக்கள் கழகம் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டது. மீண்டும் தங்களுக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பு தரும்படி ஆனந்தை சந்தித்து அவா்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியுடன் அமைச்சா் ஆனந்த் நள்ளிரவு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவறு செய்பவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்: அமைச்சா் என். ஆனந்த்

வெள்ளத் தடுப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்: அமைச்சா் ஆனந்த் அறிவுறுத்தல்

மக்களுக்காக சேவையாற்றத் தயார்: என். ஆனந்த்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

