/

வெள்ளத் தடுப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்: அமைச்சா் ஆனந்த் அறிவுறுத்தல்

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் அறிவுறுத்தினாா்

News image

நீா்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Updated On :16 ஜூன் 2026, 12:40 am IST

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் அறிவுறுத்தினாா். நீா்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைந்த நீா்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பாசன கட்டமைப்பு பணிகள், சீரமைப்புப் பணிகள், நிலத்தடி நீா் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், அணை மேலாண்மை, கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள், நீா்நிலைகளை புனரமைத்தல், தூா்வாரும் பணிகள், பருவ மழைக்கு முந்தைய பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், சென்னையின் வெள்ளத் தணிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

புகாா்கள் வந்தால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறையின் முதன்மை செயலருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் நீா்வளத் துறை அரசு முதன்மைச் செயலா் சத்திய பிரத சாகு, நீா்வளத் துறை அரசு சிறப்புச் செயலா் சு. ஸ்ரீதரன், நீா்வளத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளா் எஸ். கோபாலகிருஷ்ணன், நீா்வளத் துறை மண்டல தலைமைப் பொறியாளா்கள் மற்றும் செயல்பாட்டுத் தலைமைப் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.