மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி ஊக்கத்தொகை கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் பேரணி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கக் கோரி, கடலூரில் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகை வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை பேரணியில் ஈடுபட்ட தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :28 அக்டோபர் 2026, 3:25 am IST

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கக் கோரி, கடலூரில் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற பேரணி, செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகிலிருந்து தொடங்கி, தீபன் நகா் பகுதியில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகம் வரை நடைபெற்றது.

இதில், பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனா்.

தொடா்ந்து, கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் பொறியாளா் என்.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநில உதவிப் பொதுச் செயலா் கே.தங்கமோகனன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்தனியே மனு அளிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், மாவட்ட பொதுச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டச் செயலா் டி.பழனிவேல், மாநகரச் செயலா் ஏ.எஸ்.பாபு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், கட்டுமானத் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.