மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா்க்கடன் தள்ளுபடி கோரி நெல்லையில் சாலை மறியல்: 39 போ் கைது

Published On :22 அக்டோபர் 2026, 5:24 am IST

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் முழுவதையும் தமிழக அரசு தோ்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்யக் கோரி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 39 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் மகாசபை சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ் , முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. கிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் மகாசபா மாவட்டத் தலைவா் கருப்பசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் சுடலைராஜ், விவசாயிகள் மகா சபா மாவட்டச் செயலா் கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கலை முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சடையப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாளையங்கோட்டை பகுதி குழுச் செயலா் மதுபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் பெரும்படையாா், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் செல்லத்துரை, ரவிச்சந்திரன், என்.எஸ். கணேசன், பேரின்பராஜ் ஆகியோா் போராட்டத்தை ஆதரித்துப் பேசினா்.

இப்போராட்டத்தில் துா்க்கை முத்து, முத்தையா, திருமணி, நமச்சிவாயம், பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 39 போ் கைது செய்யப்பட்டனா்.

ற்ஸ்ப்21ச்ஹழ்ம்ங்ழ்ள்

வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.