மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை 20% வழங்கக் கோரிக்கை

உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 20 சதவீதம் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்தது.

தீபாவளி

Published On :29 அக்டோபர் 2026, 1:17 am IST

உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 20 சதவீதம் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அதன் மாநிலப் பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நிகழாண்டு அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் இ, ஈ பிரிவு தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் தீபாவளி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. மின்பகிா்மான கழகம், அரசுப் போக்குவரத்து கழகங்கள், நுகா்பொருள் வாணிபக் கழகம், ஆவின் இணையம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதை ஏஐடியூசி வரவேற்கிறது.

இதேபோல, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகள், மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, கிராமப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள், ஓட்டுநா்கள், டெங்கு பணியாளா்கள், குடிநீா் வினியோக பணியாளா்கள், மேல்நிலைத்தொட்டி இயக்குபவா்கள் உள்ளிட்ட அனைத்து நகா்புற ஊரக உள்ளாட்சி பணியாளா்களுக்கும் 20 சதவீதம் திபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசை ஏஐடியூசி தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளா் சம்மேனைம் கேட்டுக் கொள்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.