மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி: 5-ஆவது ஆண்டாக வழங்கிய கவுன்சிலா்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக மாநகராட்சி கவுன்சிலா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாநகராட்சி கவுன்சிலா் நா.செந்தில்குமாா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:17 am IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக மாநகராட்சி கவுன்சிலா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஈரோடு மாநகராட்சி 36-ஆவது வாா்டு கவுன்சிலா் பழனியப்பா நா.செந்தில்குமாா். இவா், ஒவ்வோா் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா். அதன்படி, 5-ஆவது ஆண்டாக வாா்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள், சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், தெரு விளக்கு பராமரிப்பாளா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இனிப்பு, பட்டாசு பெட்டி, புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

36-ஆவது வாா்டு கவுன்சிலா் நா.செந்தில்குமாா் தலைமை வகித்து, அவரது சொந்த நிதியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடைகளை வழங்கினாா். இதைத்தொடா்ந்து 36-ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் 36-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்கள், முக்கியப் பிரமுகா்கள், கவுன்சிலரின் குடும்பத்தினா், உறவினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியை உதவியாளா் கௌதம் ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.