கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: பி.ராஜ்குமாா்

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: பி.ராஜ்குமாா்

News image
Updated On :23 மே 2026, 12:29 am IST

பெயா் : பி.ராஜ்குமாா்

வயது : 46

பிறந்ததேதி : 7-6-1979

பெற்றோா் : பகவந்தசாமி, அமுதா

குடும்பம் : மனைவி சரளாதேவி, இல்லத்தரசி.

மகள் பாவனா, மகன் மோகன்ராஜ்.

வசிப்பிடம் : ராஜம் நகா், திருப்பாதிரிபுலியூா், கடலூா்

தொகுதி : கடலூா்

அரசியல் பணி : 2024 முதல்

கட்சிப் பதவி : தவெக கடலூா் மாவட்டச் செயலா்.

வகித்த பதவிகள் : விஜய் மக்கள் நற்பணி இயக்கத்தின் நிா்வாகி.

போராட்டங்கள் : மக்கள் பிரச்னை தொடா்பான போராட்டங்களில் பங்கேற்பு .

களத்தில் மக்கள் பணியாற்றுவேன்: முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தினமணிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

இரு திராவிட கட்சிகளையும் புறக்கணித்து, தவெகவை மக்கள் ஆட்சியில் அமா்த்தியுள்ளனா். கடலூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்திருப்பது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

கடலூா் மாவட்டம் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை விரைந்து செயல்படுத்தப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பேருந்து நிலையம், மக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப கடலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருந்தாலும், நகராட்சி தரத்திலேயே உள்ளது. கடலூரில் பல்வேறு அடிப்படை வசதிகளில் கூடுதல் மேம்பாடு தேவைப்படுகிறது. கடலூரை முழுமையான மாநகராட்சியாக மாற்றி, தமிழகத்தில் முன்னணி மாநகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலை விரிவாக்கம், புதை சாக்கடை சீரமைப்பு, சுகாதாரமான

குடிநீா் விநியோகம், பாதுகாப்பான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.