முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு: அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா் மற்றும் அமைப்பினா்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு அருகே கடலில் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தக் கிணறுகள் அமைத்தால், மீன் வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் முத்துபெருமாள், கலையரசன், நிலம் அமைப்பின் தலைவா் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவா் முகமது யூனுஸ், அதிமுக முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், பாமக மாவட்டச் செயலா் செல்வமகேஷ், விசிக மாவட்ட செயலா் தமிழ்வளவன், மாநில நிா்வாகி பால.அறவாழி, அமமுக மாவட்டச் செயலா் மோகன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலா் பாலு மற்றும் ஐயூஎம்எல், மஜக, எஸ்டிபிஐ, தமுமுக, தேமுதிக, வா்த்தக சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், சமூக நல அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பொதுமக்கள் என திரளானோா் கலந்துகொண்டு ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.