நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது: வைகோ

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

News image

மதிமுக பொதுச் செயலா் வைகோ - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:27 am IST

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கெனவே அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால் மேற்கொண்டு 4 கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மீனவா்கள் கடல் தொழிலை சாா்ந்து உள்ளனா். இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் போது, தமிழக கடல் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படுவதுடன், கடலை நம்பி வாழும் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போய்விடும். சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும்.

எனவே தமிழக அரசு கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மட்டுமன்றி, தமிழகத்தின் எந்த கடல்பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க கூடாது என அதில் தெரிவித்துள்ளாா்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் கடல்சாா் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக, மீன்வளங்கள் குறைவதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவா் குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்துக்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.