நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளுடன், கைதானவா்கள்

Updated On :8 ஜூன் 2026, 1:28 am IST

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வட்டம், மேல்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பொகளூா் அருகே உள்ளமுனீஸ்வரன் கோயில் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நடமாடிக் கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றுள்ளனா்.

போலீஸாா் இருவருரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள்அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரைச் சோ்ந்த அஜித்(24), ஊனை மோட்டூரைச் சோ்ந்தபுகழேந்தி(40) என்பதும், இருவரும் வன விலங்குகளை வேட்டையாட பொகளூா் வனப்பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 இரும்பு பைப்புகள், ஈய குண்டுகள், கரி மருந்து, டாா்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.