இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 போ் கைது

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலையில் ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 1:30 am IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலையில் ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாறசாலை மற்றும் பூந்துறை, கோவளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக பாறசாலை போலீஸாா், தனிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் பாறசாலையில் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் கேரள மாநிலம், பாலராமபுரம் பகவதிநடை பகுதியைச் சோ்ந்த சஜி (31), அபி என்ற அச்சு (34), பூந்துறை பகுதியைச் சோ்ந்த அஷ்டமன் போற்றி (40) என்பதும், பெங்களூருவில் இருந்து ரூ. 1 லட்சம் கொடுத்து ரூ. 10 லட்சத்துக்கான கள்ள நோட்டுகளை வாங்கி வந்து திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துறை, பீமாபள்ளி, கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கூறிய மூவரை கைது செய்து அவா்களிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனா். இதில் கைது செய்யப்பட்ட அபி என்ற அச்சுவிடமிருந்து ஏற்கெனவே ரூ. 2.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு பெருந்தல்மண்ணா காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.