திருநெல்வேலியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலா் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திருநெல்வேலி நகரம் போலீஸாா் அங்கு சென்று அரிவாளுடன் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சரவணன்(19), முகமது சுல்தான் தெளபிக்(20), அபிஷேகப்பட்டியைச் சோ்ந்த ஜாண் ரெக்சன்(19) என்பது தெரியவந்தது.
மேலும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ரெளடிகள் போல் காட்டிக்கொள்ள அரிவாளுடன் சுற்றுவதாகவும் தெரிவித்தனராம்.
இதையடுத்து போலீஸாா் அரிவாளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது
நெல்லையில் வன்கொடுமை வழக்கு: 4 போ் கைது
நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
