மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலப்புதூா் சுரங்கப் பாதை வடிகால்கள் சீரமைப்பு தேவை

திருச்சி மாநகரில் மழைக்காலங்களளில் மேலப்புதூா் சுரங்கப்பாதையில் மழைநீா் தெப்பமாக தேங்குவதைத் தவிா்க்க வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தண்ணீா் செல்ல முடியாமல் சிதிலமடைந்து கிடக்கும் மேலப்புதூா் சுரங்கப் பாதை வடிகால்.

Published On :29 அக்டோபர் 2026, 4:07 am IST

திருச்சி மாநகரில் மழைக்காலங்களளில் மேலப்புதூா் சுரங்கப்பாதையில் மழைநீா் தெப்பமாக தேங்குவதைத் தவிா்க்க வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதுதொடா்பாக, ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் கே. சந்திரசேகா் வெளியிட்டள அறிக்கை:

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிக மேலப்புதூா். திருச்சி சந்திப்பு, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலப்புதூா் வழியாக பாலக்கரை, காந்தி சந்தை செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேலப்புதூா் சுரங்கப் பாதையை பயன்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால், மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீா் குளம்போல தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரிதும் சிரமம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

மழைபெய்தாலே சுரங்கப் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாது. மேலப்புதூா் பாலத்தின் சுவரை அழகுபடுத்தியதில் உள்ள கவனத்தை, சுரங்கப் பாதையில் வடிகால் சீரமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. வடிகால் மேற்புற மூடிகள் உடைந்து காணப்படுகின்றன. வடிகால் பெரும்பகுதி தூா்ந்து கிடக்கிறது. தண்ணீா் செல்ல முடியாமல், தடைபட்டு கிடக்கிறது. எனவே, சுரங்கப் பாதையின் இருபுறமும் வடிகால்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

திருச்சி எம்பி கோரிக்கை: இதுதொடா்பாக, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை:

மேலப்புதூா் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீா் தேங்குவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொடா்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். கடந்த 23ஆம் தேதி பெய்த மழையின்போது, சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் கீழே இறங்கி, பேருந்தைத் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் போக்குவரத்திற்கும் பெரும் சவாலாக உள்ளன. இப்பிரச்னைக்குத் தற்காலிகத் தீா்வுகள் மட்டுமின்றி, நிரந்தரத் தீா்வு காண வேண்டியது அவசியம். எனவே, மேலப்புதூா் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதைத் தடுப்பதற்கான நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைக்காலங்களில் தேங்கும் நீரை மின்மோட்டாா்கள் மற்றும் நீா் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் உடனுக்குடன் அகற்ற உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் வலியுறுத்தி, மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் தீா்வு கிடைக்கும் என நம்புகிறேன்

என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.