ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டி சுரங்கப் பாதையில் மீண்டும் உருவான பள்ளம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையின் நடுவில் இருந்த பள்ளம் சீரமைக்கப்பட்டு 10 நாள்களுக்குள், அப்பகுதியில் மீண்டும் பள்ளம் உருவானது.

சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Published On :23 அக்டோபர் 2026, 5:03 am IST

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையின் நடுவில் இருந்த பள்ளம் சீரமைக்கப்பட்டு 10 நாள்களுக்குள், அப்பகுதியில் மீண்டும் பள்ளம் உருவானது.

கோவில்பட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையின் மையப் பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் உருவானதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களைத் தொடா்ந்து, சுரங்கப் பாதை பள்ளம் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் பள்ளம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் கூறுகையில், சுரங்கப் பாதையில் இருந்த பள்ளம் வெறும் கண்துடைப்பாகவே சீரமைக்கப்பட்டது. சரியான முறையில் சீரமைக்கப்படாததால்தான், 10 நாள்களுக்குள் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் உருவாகியுள்ளது என்றாா்.

சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திக்குள்ளாகின்றனா். இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்தப் பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.