பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டியுடன் இளையரசனேந்தல் குறுவட்டம் இணைப்பு: கிராம மக்கள் மகிழ்ச்சி

குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்த இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதை வரவேற்று இளையரசனேந்தலில் கிராம மக்கள் புதன்கிழமை இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

~ இளையரசனேந்தலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய விவசாயிகள், பொதுமக்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 5:22 am IST

குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்த இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதை வரவேற்று இளையரசனேந்தலில் கிராம மக்கள் புதன்கிழமை இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் கடந்த 1.5.2008-இல் இணைக்கப்பட்டது.

இந்த ஊராட்சிகளில் அரசின் மற்ற துறைகள் கோவில்பட்டியுடன் இணைக்கப்பட்ட நிலையில், ஊரக உள்ளாட்சித் துறையில் மட்டும் 12 ஊராட்சிகளும் இணைக்கப்படவில்லை.

இதுதொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்து புளியங்குளம், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், பிச்சைதலைவன்பட்டி, பிள்ளையாா்நத்தம், ஜமீன்தேவா்குளம், அப்பநேரி, அய்யநேரி, சித்திரம்பட்டி, வடக்குப்பட்டி, நக்கல முத்தன் பட்டி, முக்கூட்டு மலை ஆகிய 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இம்மாதம் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளுக்கும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களை நியமித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரும், தனி அலுவலருமான முத்துக்குமாா் உத்தரவிட்டுள்ளாா். இந்த அலுலவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.20) பொறுப்பேற்றனா்.

நீண்ட நாள் கோரிக்கையான 12 ஊராட்சிகளும் முழுமையாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதை வரவேற்று, இளையரசனேந்தல் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன .

நிகழ்ச்சிக்கு இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழு தலைவா் முருகன் தலைமை வகித்தாா். தேசிய விவசாயிகள் சங்க தலைவா் ரெங்கநாயகலு முன்னிலை வகித்ததாா். முன்னாள் ராணுவ வீரா் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.