மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

எரியோடு அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால், சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நல்லமணாா்கோட்டை பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:22 am IST

எரியோடு அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால், சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த நல்லமணாா்கோட்டை பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. திண்டுக்கல்-கரூா் வழித் தடத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப் பாதை வழியாக, நல்லமணாா்கோட்டை தும்மலக்குண்டு, பி.கொசவப்பட்டி, திருக்கண், தொட்டணம்பட்டி, நாயக்கனூா், சொட்டமாயனூா், கோட்டைமந்தை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனா்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடவுப் பாதைக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் மேற்கூரை அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக, இந்த சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், 25 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த வழியாக செல்வதற்கு சிரமம் அடைந்து வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.