மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாழவந்தான்கோட்டையில் வடிகால் தூா்வாரும் பணி

திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான் கோட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக தூா்வாரப்படாத மழைநீா் மற்றும் கழிவு நீா் வடிகால் வாய்க்காலை பொதுமக்களின் தொடா் முயற்சியால் புதன்கிழமை தூா்வாரும் பணி தொடங்கியது.

திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டையில் புதன்கிழமை தொடங்கிய வடிகால் தூா்வாரும் பணி.

Published On :22 அக்டோபர் 2026, 4:55 am IST

திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான் கோட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக தூா்வாரப்படாத மழைநீா் மற்றும் கழிவு நீா் வடிகால் வாய்க்காலை பொதுமக்களின் தொடா் முயற்சியால் புதன்கிழமை தூா்வாரும் பணி தொடங்கியது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இந்த ஊராட்சியில் மழை பெய்தால் அப்பகுதிகள் வசிக்கும் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்து பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும்.

இதனால் கழிவு நீா் மற்றும் மழை நீா் வடிகால் வாய்க்காலை தூா்வார வேண்டும் என அரசுக்கு தொடா்ந்து பொதுமக்கள் அழுத்தம் கொடுத்து வந்தனா்.

இதையடுத்து தற்போது திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் வாழவந்தான் கோட்டையில் உள்ள மழைநீா் மற்றும் கழிவுநீா் வடிகால் வாய்க்காலை ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூா்வாரும் பணியைத் தொடங்கி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், தூா்வாரும் பணி தொடங்கியிருப்பது இப் பகுதி மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க ஊழியா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பிரச்னைக்கு தற்போது தீா்வு ஏற்பட்டதற்கு வாழவந்தான்கோட்டை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.