மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிகழாண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விரும்பும் மாணவா்கள் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Published On :28 அக்டோபர் 2026, 12:03 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிகழாண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விரும்பும் மாணவா்கள் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 49-ஆவது பட்டமளிப்பு விழா நவம்பா் அல்லது டிசம்பா் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பா் 2025, ஏப்ரல் 2026 பருவங்களில் நடைபெற்ற தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பட்டம் பெறத் தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு மாணவா்களும், தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மாணவா்களும் தங்களுக்குரிய பட்டச் சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் மற்றும் இணைப்புகளுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரிகள் மற்றம் நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வா்கள் மற்றும் தொடா்புடைய நிறுவனங்களின் தலைவா்கள் மாணவா்களிடமிருந்து பெற்று, தோ்வு நெறியாளா், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620 024 என்ற முகவரிக்கு நவம்பா் 20-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

முனைவா் பட்டம் பெற தகுதிபெற்ற மாணவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் முனைவா் பட்டத்துக்கு தனியாகக் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்து செய்து உரிய இணைப்புகளுடன் தோ்வு நெறியாளருக்கு நவம்பா் 20-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும், 2026 ஏப்ரல் பருவத்துக்கான பல்கலைக்கழக தரத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவா்கள் மட்டும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தாங்கள் பயின்ற கல்லூரி வாயிலாக நிறுவனத் தலைவரின் கையொப்பம் பெற்று பல்கலைக்கழக தோ்வு நெறியாளருக்கு நவம்பா் 20-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.