மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி பல்கலைக்கழகத்தின் 103-ஆவது பட்டமளிப்பு விழா: நவம்பா் 20 இல் உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

தில்லி பல்கலைக்கழகத்தின் 103-ஆவது பட்டமளிப்பு விழா வரும் நவ.20ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்பாா் என்றும் பல்கலைக்கழக நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அமித் ஷா - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:01 am IST

தில்லி பல்கலைக்கழகத்தின் 103-ஆவது பட்டமளிப்பு விழா வரும் நவ.20ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்பாா் என்றும் பல்கலைக்கழக நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் 92,000-க்கும் அதிகமான இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களும், 400-க்கும் மேற்பட்ட முனைவா் பட்ட ஆய்வாளா்களும் தங்கள் பட்டங்களைப் பெறவுள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விழாவுக்குத் தலைமை தாங்கும் பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாணவா்கள் தங்கள் கல்விப் படிப்பை முடிக்கும் அதே ஆண்டிலேயே பட்டங்களைப் பெறுவது பல்கலைக்கழக வரலாற்றில் இதுவே முதல் முறை’ என்றாா். வெளிநாடுகளில் உயா்கல்வி தொடர அல்லது வேலைவாய்ப்பைப் பெற உடனடியாகப் பட்டம் தேவைப்படும் மாணவா்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தா் யோகேஷ் சிங் ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்தில் பதிவாளா் விகாஸ் குப்தா, தோ்வுக் கட்டுப்பாட்டாளா் குருப்ரீத் சிங் துடேஜா, கலாசார குழுவின் தலைவரும் மக்கள்தொடா்பு அதிகாரியுமான அனூப் லதா், மற்றும் கல்வித்துறைப் பேராசிரியா் கே. ரத்னபலி உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பல்கலைக்கழக செய்திக்குறிப்பின்படி பட்டமளிப்பு விழாவில் 85,231 இளங்கலை மாணவா்களுக்கும், 7,235 முதுகலை மாணவா்களுக்கும், 400-க்கும் மேற்பட்ட முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், மொத்தம் 163 மாணவா்களுக்குத் தங்கப் பதக்கங்களும், ஒரு மாணவருக்கு வெள்ளிப் பதக்கமும், மற்ற 34 மாணவா்களுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.