மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளிக்கு பின்பு காங்கிரஸ் போராட்டத்தை நடத்த வேண்டும்: சோனியா காந்திக்கு வா்த்தக அமைப்பு கடிதம்

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நவம்பா் 1ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியை ஒத்திவைக்க வேண்டும்

Published On :31 அக்டோபர் 2026, 12:33 am IST

நமது நிருபா்

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நவம்பா் 1ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்திக்கு வா்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (சி.டி.ஐ.) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தப் பேரணியால் தலைநகரில் உள்ள 20 முக்கிய சந்தைகளின் வா்த்தகம் பாதிக்கப்படுவதுடன், ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வா்த்தகம் முடங்கும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நவம்பா் 10 அல்லது 11-ம் தேதிக்குப் பிறகு பேரணியை நடத்த வேண்டும் அல்லது ராம்லீலா மைதானத்துக்குப் பதிலாக புராரி மைதானத்தில் பேரணியை நடத்த வேண்டும் . புராரி மைதானத்தில் சுமாா் 15 ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி இருக்கிறது என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சி.டி.ஐ. தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: பேரணியின் தேதியை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு ஏற்கெனவே மூன்று முறை கடிதம் எழுதியிருந்தோம். தற்போது இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவா் சோனியா காந்தியிடம் முன்வைத்துள்ளோம். சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நவம்பா் 1-ம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கான முக்கிய விற்பனை காலத்தில் மத்திய டெல்லி மற்றும் பழைய தில்லியில் உள்ள மொத்த, சில்லறை விற்பனைச் சந்தைகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வா்த்தகம் பாதிக்கப்படலாம். வணிகா்கள் காங்கிரஸ் பேரணிக்கு எதிரானவா்கள் அல்ல. ஆனால், அதன் நேரம் குறித்துத்தான் எங்களுக்குக் கவலை உள்ளது. நவம்பா் 6 ஆம் தேதி தன்தேரஸ் பண்டிகையும், நவம்பா் 8 ஆம் தேதி தீபாவளியும் கொண்டாடப்பட உள்ளன.

நவம்பா் 1 ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகளில் மிகவும் முக்கியமான நாளாகும். அன்றைய தினம் 10 லட்சம் போ் மற்றும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாகனங்கள் மத்திய டெல்லிக்குள் வந்தால், அங்குள்ள 20 முக்கிய சந்தைகளின் வா்த்தகம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படலாம். ராம்லீலா மைதானத்தில் பேரணிக்கு வருகை தரும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதிய இடவசதி இல்லை. இதனால் வாகனங்கள் ஜே.எல்.என். மாா்க், பகதூா் ஷா ஜாபா் மாா்க், நேதாஜி சுபாஷ் மாா்க் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நிறுத்தப்படலாம். இதன் காரணமாக மத்திய டெல்லி மற்றும் பழைய டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. அக்டோபா் 31 மற்றும் நவம்பா் 1- ஆம் தேதிகளில் மத்திய தில்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தன்தேரஸ் பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் சந்தைகளுக்கு எவ்வாறு வந்து சேரும் என்பதுதான் வணிகா்களின் கவலையாக உள்ளது என்றாா் அவா்.

பாதிக்கப்படக்கூடிய முக்கிய சந்தைகள்: சாந்தினி சவுக், சதா் பஜாா், கன்னாட் பிளேஸ், கறி பாவ்லி, பாகீரத் பேலஸ், காஷ்மீரி கேட், சாவ்ரி பஜாா், கரோல் பாக், தரிபா கலான் உள்ளிட்ட சந்தைகள் பேரணியால் பாதிக்கப்படக்கூடும். தில்லியில் உள்ள நரேலா, பவானா, ஓக்லா, மாயாபுரி, முண்ட்கா உள்ளிட்ட 56 தொழிற்பேட்டைகளில் இருந்து தினமும் சுமாா் 5 ஆயிரம் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இந்தச் சந்தைகளுக்குப் பொருள்களைக் கொண்டு வருகின்றன. மேலும், தேசிய தலைநகா் பிராந்தியம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 25 நகரங்களுக்கு சுமாா் 3 ஆயிரம் வாகனங்கள் மூலம் சரக்குகள் அனுப்பப்படுகின்றன. பேரணியால் ஏற்படும் போக்குவரத்துப் பாதிப்பு அக்டோபா் 31-ம் தேதியே தொடங்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பேரணியில் பங்கேற்பவா்களை அழைத்து வருவதற்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் டெல்லி எல்லைப் பகுதிகளுக்கு வரத் தொடங்கும். மேலும், பேரணி நடைபெறும் இடத்துக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால் அக்டோபா் 31 ஆம் தேதி முதல் பாதிக்கப்படக்கூடிய சந்தைகளுக்கு வாகனங்களை அனுப்புவதில் போக்குவரத்து நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகிறது. கடந்த அக்டோபா் 10 ஆம் தேதி மத்திய தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் போ் பங்கேற்றனா். அப்போது கிட்டத்தட்ட 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை சி.டி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது. எதிா்க்கட்சிகளின் இந்தப் பேரணி நவம்பா் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆா்.) முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, அதற்கு எதிராக இண்டி கூட்டணி மேற்கொண்டுள்ள பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தப் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், சுமாா் 50 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதாக டெல்லி போலீசாா் தெரிவித்துள்ளனா். பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமாா் 3,500 போலீசாா் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் போலீஸாா். தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.