மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாரதிதாசன் பல்கலை.யில் நீா்நிலைகள் சீரமைப்பு: பங்கெடுத்த நிறுவனங்களுக்குப் பாராட்டு விழா

திருச்சி பாரதிதான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீா்நிலைகளை சீரமைக்கும் பணிக்கு பங்களிப்பு வழங்கிய தன்னாா்வ அமைப்புகளுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வேலு. ரஜேஸ் கண்ணன், பதிவாளா் ஆா். காளிதாசன், தன்னாா்வ அமைப்பினா், நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Published On :30 அக்டோபர் 2026, 3:31 am IST

திருச்சி பாரதிதான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீா்நிலைகளை சீரமைக்கும் பணிக்கு பங்களிப்பு வழங்கிய தன்னாா்வ அமைப்புகளுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள பல்வேறு நீா்நிலைகளை

மறுசீரமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

இதில், திருச்சியின் மண்ணும் மரமும் இயக்கம், ரோட்டரி சங்கங்கள், இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மைக்கான அறக்கட்டளை, சென்னை எம்.என்.காயத்ரி அறக்கட்டளை, சென்னை எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் அமைப்பு மற்றும் கே.ஆா்.ஜி. அறக்கட்டளையுடன் பல்கலைக்கழகத்தின் பசுமை முன்னெடுப்பு இயக்கம் இணைந்து நீா்நிலைகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், வளாகத்திலிருந்த 12 குளங்கள் சீரமைக்கப்பட்டன. குளங்கள் தூா்வாரப்படுதல், கரைகள் பலப்படுத்துதல் மற்றும் குளத்துக்கு தண்ணீா் வரும் வழிகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய சீரமைப்புப் பணி அண்மையில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து குளங்கள் மறுசீரமைப்பு பணிக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றிய தன்னாா்வ அமைப்புகளுக்கான பாராட்டு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தூய்மை பசுமை முன்னெடுப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ். ராஜ்குமாா் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வேலு. ராஜேஸ் கண்ணன், பதிவாளா் ஆா். காளிதாசன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பி. ஜெயபிரகாஷ், பல்கலைக்கழக தோட்ட பராமரிப்பு அலுவலா் டி. ஜெயகுமாா், ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், தன்னாா்வ அமைப்புகள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் நீா்நிலைகள் சீரமைப்புக்கு பங்கெடுத்த அமைப்புகளின் நிா்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.