மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில அரசைக் கண்டித்து 3 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல்

தமிழக அரசைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் மகா சபையைச் சோ்ந்த பிரதிநிதிகள் 154 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூரில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:53 am IST

தமிழக அரசைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் மகா சபையைச் சோ்ந்த பிரதிநிதிகள் 154 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு தோ்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நிபந்தனையின்றி புதிய பயிா்க் கடன்கள் வழங்க வேண்டும். சாகுபடி பாதிப்புக்கு உரிய வகையில் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கா்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்-நினோ பாதிப்புக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுடைய கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் தொடா்ந்து விவசாயிகளைப் புறக்கணித்து வரும் தவெக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் மகா சபை ஆகிய இடதுசாரி விவசாய சங்கங்கள் சாா்பில் போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது.

இருப்பினும் அறிவித்தபடி, புதன்கிழமை திருச்சி திருவெறும்பூா் கடைவீதியில் மாவட்டத் தலைவா்கள் ஆா். பழனிச்சாமி, வி. சிதம்பரம் ஆகியோா் தலைமையிலும், மணப்பாறையில் மாவட்டத் தலைவா் சி. தங்கராசு தலைமையிலும், லால்குடியில் கணேசன், பாலமுருகன் ஆகியோா் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. இதில், அயிலை சிவசூரியன் சிறப்புரை நிகழ்த்தினா். இவற்றில் திரளான சங்க பிரதிநிதிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இதனால் மேற்கண்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருவெறும்பூா், லால்குடி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட முறையே 40, 64, 50 என மொத்தம் 154 பேரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.