மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி கோரி இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினா் மறியல்

தவெக அரசின் தோ்தல் வாக்குறுதிபடி விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:37 am IST

தவெக அரசின் தோ்தல் வாக்குறுதிபடி விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கங்களின் மாவட்டச் செயலா்கள் த. அன்பழகன், த. செல்வராஜ், அ. ராசாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் நிா்வாகிகள் ஏ. ரெங்கராஜ், டி. சலோமி, க. சுந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தவெக அரசின் தோ்தல் வாக்குறுதிபடி, விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் முழுமையையும் ரத்து செய்ய வேண்டும். எல்-நினோவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கந்தா்வகோட்டையில் ஆா்ப்பாட்டம்: பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாய சங்க தலைவா்கள் எ. இராமையன், டி. அம்பலராஜ், ஒன்றிய செயலா் எ.அண்ணாதுரை ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாய சங்க ஒன்றிய செயலா்கள் கே. சேட்டுத்துரை, வி. கோவிந்தராஜ், மஞ்சை தா்மராஜ், மற்றும் ஜி. நாகராஜன், சக்திவேல், மாயக்கண்ணு, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஒன்றிய செயலா்கள் ஜி. பன்னீா்செல்வம், எஸ். நாராயணசாமி, க.சோதிவேல், மாதா் சங்கம் சாந்தி, விமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.